மட்டக்களப்பின் அழகையும் பெருமையினையும் பறைசாற்றும் வகையில் மட்டக்களப்பு கலைஞர்களின் அயராத முயற்சியினால் வெளிவரவிருக்கும் சொந்த ஊரே சொர்க்கம் என்னும் மட்டு காணொளி வெளியீட்டு விழா இன்று இடம்பெறவுள்ளது.
எமது கலைஞர்களின் திறமையினையும் எமது மாவட்டத்தின் அழகையும் வெளிக்கொணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் கொண்ட காணொளியானது யூரிப்பிலும் (youtube)வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த இறுவெட்டின் வெளியீட்டு விழா இன்று மாலை 7.00மணியளவில் கல்லடி கடற்கரையில் பிரமான்டமானமுறையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்த வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்துகொண்ட அந்த கலைஞர்களுக்கு மேலும் ஊக்கங்களை வழங்கி மேலும் படைப்புகளை கொண்டுவர ஊக்கம் அளிக்க முன்வரவேண்டியது மட்டக்களப்பார் கடமையாகும்.
அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ந்து கலைஞர்களை பாராட்டிச்செல்ல மட்டு நியுஸ் செய்தி தளம் அனைவரையும் அழைத்து நிற்கின்றது.

