(Husna
)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக மீள் குடியேற்ற அமைச்சினால் பல் வேறு வேலைத்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ் வேலைத்திட்டத்திற்கு அமைய கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் யுத்திம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஐம்பது (50) மேசன் தொழில் புரிபவர்களுக்கு மேசன் தொழிலுக்குறிய உபகரணங்கள் (30.08.2013) வழங்கி வைக்கப்பட்டன.
உபகரணங்கள் வழங்கி வைக்கப்படும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற போது மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மீள் குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தர்.