வயல்வேலையில் ஈடுபட்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மயிலந்தன்னை வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது  47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மயிலந்தன்னை வயல் வெளியில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே நேற்று சனிக்கிழமை மாலை இவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகினார்.  இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் இவர்; உயிரிழந்ததாக இவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.