அக்சஸ் பொறியியலாளர் நிறுவனத்தினால் மட்டக்களப்பு ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு தண்ணீர் வசதிக்காக தண்ணீர் தாங்கி பொருத்தப்பட்டடு நீர் விநியோக திட்டம் இன்றைய தினம் திங்கட் கிழமை பகல் அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது பாடசாலையின் ஆசிரியர் செல்வகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அக்சஸ் பொறியியலாளர் நிறுவனத்தின் கணக்காளர் சாமர மற்றும் செயற்திட்ட கணிய அளவையாளர் சானக ஆகியோருடன் நிறுவன அலுவலகர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர்; கலந்து கொண்டனர்.
இந்நீர் விநியோகத் திட்டம் சுமார் 100000 ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
அத்துடன் மட்டக்களப்பு ஆயித்தியமலை முள்ளாமுனை முருகன் வித்தியாலயத்திற்கும் இந்நிறுவனத்தினால் ரூபா 80000 பெறுமதியில் அடி தண்ணீர் குழாய் வசதி செய்து கொடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.