புன்னைச்சோலை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்

( லியோன் )    

மட்டக்களப்பு -அமிர்தகழி -புன்னைச்சோலை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

பெருவிழா 02.09.2013 திங்கட்கிழமை   நண்பகல் 12.00 மணிக்கு மதிய பூசையுடன் கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது .உற்சவ காலங்களில் தினமும் மாலை ,வாஸ்துசாந்தி ,கிராமசாந்தி ,நவக்கிரகசாந்தி ,மிருத்தசங்கிரணம் ,திருவிளக்குப் பூசை ,சுமங்கலிபூசை ,கணபதி ஹோமதத்துவம் ,மற்றும் வசந்த மண்டபப் பூசையுடன் சுவாமி ஆலயத்தை சுற்றி வலம் வந்து குரு ஆசிர்வாதங்களும் இடம்பெற்றன.          .                                                                                                                                                                                           இன்று 09.09.2013 திங்கட்கிழமை  காலை 08.00 மணிக்கு அபிஷேக பூசை ,மங்கள ஆராத்தியுடன் சுவாமி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தில் முற்பகல் 11.00மணிக்கு தீர்த்தமாடி,சுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும் திருப்பொன்னுஞ்சல் ,குரு ஆசிர்வாதம் என்பன இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து அடியார்கட்கு அன்னதானம் வழங்கப்பட்டு ,திருவிழா இனிதாக நிறைவு பெற்றது. திருவிழா உற்சவ காலங்களில் உற்சவகால பிரதம குருவாக ,ஆலய பிரதம குரு ,கிரியா பூசணம் சிவஸ்ரீ காசிமாபஞ்சாட்சரக் குருக்களும் ,உதவிக்குருவாக ,குறுமன்வெளி ,சிவஸ்ரீ மு .ரஞ்சித் சர்மா அவர்களும் திருவிழா  உற்சவ கால பூசை வழிபாடுகளை நடத்தி வந்தனர் .