முட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சின்னவத்தை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ர்p 56 துப்பாக்கிகள் இரண்டும் நான்கு மகசீன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸாரே இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் இப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுதங்கள் வெல்லாவெளி பொலிஸ் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
