(சசி ஜதாட்சன்)
பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 07 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கடந்த 30ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை சதா சகாய அன்னை ஆலய திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை 07ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வருடா வருடம் இடம்பெறும் இப் பாதயாத்திரை இவ் வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் 07 ஆம் திகதி சனிக் கிழமை காலை 5.15 மணிக்கு இடம்பெறும் திருப்பலியினைத் தொடர்ந்து 5.45 மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகி வீச்சுக்கல்முனை சந்தண மாதா அலயம் சென்று வலையிறவுப் பாலம் ஊடாக வவுணதீவுப் பிரதேச செயலகம் அடைவதுடன் அங்கு விசேட செபவழிபாடு இடம்பெறுவதுடன் பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின் தலைமையில் அலுவலக நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் இடம்பெறும் தாக சாந்தி மற்றம் அன்னதானத்தினைத் தொடர்ந்து யாத்திரை வவுணதீவு ஆயித்தியலை பிரதான வீதியுடாக அன்னையின் ஆலயத்தை பாதயாத்திரை சென்றடையவுள்ளது.
இப் பாத யாத்திரையில் அனைத்து கிறிஸ்தவ வாழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ் சமூகம் பாத யாத்திரையில் கலந்துகொள்பவர்களது பொதிகளை ஏற்றுவதற்கும் ஆலயத்தில் இருந்து திரும்புவதற்கும் வாகன ஒழுங்கு செய்துள்ளதாகவும் பாத யாத்திரையின் போத செப வழிபாட்டினை நடாத்த விரும்பும் பக்கிச் சபைகள்,குழுக்கள் முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.