ஐ.நா விற்கான இலங்கையின் இளைஞர் பிரதிநிதிமட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

(சசி ஜதாட்சன்)

இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இளைஞர் பிரதிநிதி ஆதில் வாக்கிர்மாக்கார் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களது பிரச்சினைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களைச் சந்தித்து ஆராய்ந்துள்ளார்.

இம் மாதம் 18ஆம் திகதி நியுயோக் நகரில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா.சபையின் மகாநாட்டில் இலங்கையின் இளைஞர் நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாகச் சென்று இளைஞர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துவரும் நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் உதவி;ப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் இன்று இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள்,இளைஞர் கழகத் தலைவர்கள் பாடசாலை இளைஞர் கழக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினர்.

இச் சந்திப்பில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே.கலாராணி,ஆலிதீன் ஹமீர் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.