இந்த சம்பவம் ஹிரிவடுன்ன என்ற பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான இராசையா அபேசுந்தரம் என்பவரே பலியாகியுள்ளார்.
இவரது சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கும்போதே இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

