கிழக்கிலங்கையின் நீண்ட வரலாற்றினைக்கொண்ட இந்த ஆலயமானது மகாதுறவி சுவாமி ஓங்காரனந்தா சரஸ்வதி அவர்களால் உருவாக்கப்பட்டு ஒரு சித்த பீடமாக அடியார்களுக்கு அருள்பாலித்துவருகின்றது.
இலங்கையில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் தமிழ் முறையில் வேதங்கள் ஓதப்பட்டு பூசைகள் செய்யப்படும் ஆலயமாகவும் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயம் விளங்கிவருகின்றது.
இந்த ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வானது பண்டைய வழிபாட்டு முறைகளைக்கொண்டதாகவே இடம்பெற்றுவருகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
கடந்த 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் இன்று தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
குதிரைகள் பூட்டப்பட்ட சித்திரத்தேரில் பெண் அடியார்கள் ஒரு புறமாகவும் ஆண் அடியார்கள் ஒரு புறமாகவும் வடம் பிடித்து இழுத்துவர முருகப்பெருமான் வீதியுலா வந்த காட்சி அனைவரையும் மன மகிழச்செய்தது.