ஸ்ரீ அம்மா பகவான் தியான மண்டபத் திறப்பு விழா.

(சசி ஜதாட்சன்)

மட்டக்களப்பு எல்லை வீதியில் மட்டக்களப்பு ஏகத்துவ அமைப்பின் ஏற்பாட்டில் ஸ்ரீ அம்மா பகவான் தியான மண்டபத் திறப்பு விழா எதிர்வரும் 07 ஆம் திகதி சனிக் கிழமை  காலை 8.0 மணிக்கு இடம்பெறவுள்ளது.

07 ஆம் திகதி சனிக் கிழமை காலை 8.01 மணிக்கு அம்மா பகவான் ஸ்ரீ மூர்த்தி,பாதுகை வீதி பிரசன்னமாக தியான மண்டபப் பிரவேசம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து விசேட ப+சை,குபேரலட்சுமி மகா யாகம் இடம்பெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து பஜனை வழிபாடு,மகேஸ்வர ப+சையுடன் நிறைவு பெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு ஏகத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ அம்மா பகவானின் அனுக்கிரகத்தைப் பெற்றேகுமாறும் மட்டக்களப்பு ஏகத்துவ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.