மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் செயற்படும் வகையில் தமிழ்ச் சங்கம் ஒன்று அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பிரபல எழுத்தாளரும் கவிஞருமான வாகரைவாணன், கோரளைப்பற்று வடக்கு கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவராம் ஆகியோரின் ஏற்பாட்டில் இவ் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
இதன் தலைவராக ஓய்வுபெற்ற அதிபர் செ.தபராசா, செயலாளராக கவிஞரும் ஓய்வு பெற்ற கிராம அதிகாரியுமான குழ.சிங்காரவேல், பொருளாளராக செல்வி சின்னத்தம்பி குணநாயகி ஆசிரியை , உபதலைவராக ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.ரி.எம்.பிரான்சிஸ், உப செயலாளராக எஸ்.தேவசிறி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், 6 நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அதே வேளை, காப்பாளராக பிரபல எழுத்தாளரும் கவிஞருமான வாகரைவாணன், இணைப்பாளராக கோரளைபபற்று வடக்கு கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவராமும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இத் தமிழ் சங்கம் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளிலும் கலை மீள் உருவாகக்கச்செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக சங்கம் தெரிவித்தது.
