இவ்விழாவில் பல்லினமக்களும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டதுடன் லாச்சப்பல் பகுதியில் அமைந்திருந்த சகல வியாபர தாபனங்களும் இவ் விழாவில் கலந்துகொண்ட சகல மக்களுக்கும் உணவு மற்றும் குளிர்பானங்களும் வழங்கி தேர் திருவிழாவை சிறப்பித்திருந்தனர்.
இவ் விழாவில் பிரான்ஸ் நாட்டில் உள்ள மட்டக்களப்பை சேர்ந்த பாடுமீன் அபிவிருத்தி சங்கம் லாச்சப்பல் பகுதியில் பொதுமக்களுக்காக தாகசாந்தி நிலையம் ஒன்றை நிறுவி மோர் மற்றும் அன்னதானம் கொடுத்து சிறப்பித்திருந்தமையனது வரவேற்கவேண்டிய விடயமாகும்.
ஏனெனில் பிரான்ஸ்சில் பல தமிழ் சங்கங்கள் எத்தனையோ இருந்தும் அவை எதுவும் எடுக்காத முயற்சியை இவர்கள் எடுத்தமையனது புதிதொரு முயற்சியின் பரிணாமாக இருந்தது.




