செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரம் கற்று வரும் மாங்காடு எல்லை வீதியை சேர்ந்த வீரசிங்கம் டிலக்ஸன்(16வயது)என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு தீண்டிய நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிமை மாலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.