இவர்களில் 62பேர் பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றதாகவும் 20பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற்றுச்சென்றதாகவும் தெரிவித்தார்.இதேபோன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 15பேரும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் சிகிச்சைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிகிச்சைபெற்றவர்களில் பலர் வீடு சென்றுள்ளநிலையில் 13பேர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரியகல்லாறு திருமண வீடு ஒன்றில் பரிமாறப்பட்ட உணவுடன் சேர்க்கப்பட்டிருந்த இறைச்சி அல்லது இரால் போன்ற உணவில் இருந்தே இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் உணவு மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடியினை சேர்ந்த ஒருவரே இந்த திருமண வீட்டுக்கான சமையல் வேலைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த திருமண வீட்டில் உணவு உட்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
