மனைவியின் கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட கணவன் -வெளிவரும் அதிர்ச்சி தகவல்

மனைவியுடனான கள்ளத்தொடர்பு காரணமாகவே கல்லடியில் சடலமாக மீட்கப்பட்டவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் கள்ளக்காதலர் என சந்தேகிக்கப்படுபவர் உட்பட மூவர் இந்த கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

கல்லடி,சரவணா வீதியில் உள்ள பாழடைந்த வளவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் கந்தமூர்த்தி புவனேந்திரன்(30வயது)என்ற ஒரு பிள்ளையின் தந்தையினுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையின்போது உயிரிழந்தவரின் மனைவியுடன் தொடர்பைக்கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படும் உயிரிந்தவரின் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் மறைந்திருந்த நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.