கிராண்குளம் பொலிஸ் சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் இந்த குளவித்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு இப்பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக மரமொன்றில் இருந்து பெரிய குளவிக்கூண்டு வீழ்ந்ததால் அதில் இருந்து வெளியாகிய பெருமளவான குளவிகளினால் அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மற்றும் செட்டிபாளையம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
