தாண்டவன்வெளியில் விபத்து-தெய்வாதீனமாக பிழைத்துக்கொண்டார்கள்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் நேற்று விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது தெய்வாதீனமாக யாரும் சேதங்கள் ஏற்படவில்லையென மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாக வந்த காரொன்றுடன் முச்சக்கர வண்டி மோதி தூக்கியெறியப்பட்டபோது அப்பகுதியில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் அதில் சிக்கியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டி கவிழந்தபோதிலும் அந்த விபத்துச்சம்பவத்தினால் யாருக்கும் எதுவித சேதங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் முச்சக்கர வண்டியை மோதிய கார் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.