இது தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பெருந்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
வலையிறவு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ரகுமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் எச்.ஐ.வி.,எயிட்ஸ் மற்றும் தொழு நோய் தடுப்பு பிரிவின் பொதுச்சுகாதார பரிசோதகர் மனோகரன் சிறப்புரையாற்றினார்.
இந்த கருத்தரங்கில் குறித்த பயிற்சி நிலையத்தின் பயிற்றுவிப்பாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.