செட்டிபாளையத்தில் ஆசிரியரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சேட்டிபாளையம் எல்லை வீதியை சேர்ந்த பிரதீபன் என்ற ஆசிரியர் ஒருவரின் வீட்டின் மீதே இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

போத்தலில் பெற்றோல் நிரப்பப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.