பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலயத்துக்கு அருகில் கொள்ளையில் ஈடுபட்ட குழு கைது

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், 50,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இதன்படி கல்முனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, கொள்ளையிடப்பட்ட பணத்துடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இன்றையதினம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.