மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட கரடியனாறு பகுதியில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான கரடியன்குளம் மாணவர்களின் நன்மை கருதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கை பகவான் ஸ்ரீசத்தியசாயி சேவா நிறுவனங்களின் மத்தியசபையின் அனுசரணையில் தாமரைக்கேணி பகவான் ஸ்ரீசத்தியசாயி சேவா நிலையம் 14 துவிச்சக்கர வண்டிகளை இப்பிரதேச மாணவர்களுக்கு வழங்கியது.
இது தொடர்பான நிகழ்வு கரடியன்குளத்தில் இன்று இடம்பெற்றது. தாமரைக்கேணி பகவான் ஸ்ரீசத்தியசாயி சேவா நிலையத்தின் தலைவர் ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பகவான் ஸ்ரீசத்தியசாயி சேவா நிறுவனங்களின் கிழக்கு பிராந்திய இணைப்பு குழு தலைவர் ஜி.விநாயகமூர்த்தி,சேவை இணைப்பாளர் எம்.கிருபராசா,கல்வி இணைப்பாளர் ஸ்ரீமதி ஆர்.செல்வராஜா,மகிழா இணைப்பாளர் ஸ்ரீமதி ஆர்.ஜெகநாதன் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
இப்பிரதேச மாணவர்கள் தமது பாடசாலை கல்வியை மேற்கொள்வதற்கு எதுவித போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் நீண்டதூரம் நடந்தே செல்லவேண்டி நிலையிருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.