ஆயித்தியமலை சதா சகாய அன்னை ஆலய திருவிழா திருப்பலி.

(சசி ஜதாட்சன்)

பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை சதா சகாய அன்னை ஆலய திருவிழாத் திருப்பலி இன்று ஞாயிற்றுக் கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருள்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 30ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று திருவிழாத் திருப்பலி இடம்பெற்றது.

பங்குத் தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத் திருவிழா திருப்பலியில்  அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகைதந்த பல ஆயிரக் கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.