இந்து மக்களின் உரிமை மீறல்கள் சம்பந்தமான கலந்துரையடலுக்கு விஸ்வ ஹந்து பரிசத்அழைப்பு

கிழக்கு மாகாண இந்து ஆலயங்கள், மக்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள், காணி உரிமங்கள், கலாச்சார சீரழிவுகள் ஆகியவற்றின் மூல காரணங்களை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்து சமூகத் தலைவர்கள் உடனான சந்திப்பொன்றுக்கு விஸ்வ ஹந்து பரிசத்தின் கிழக்குப் பிராந்திய பிரதிநிதியாகிய வருண் கமலதாஸ் விடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்ள விருப்பமான இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இச் சந்திப்பு எதிர்வரும் 15ஆம்திகதி காலை நடைபெறவுள்ளதானால் அதற்கு முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டு இப் போச்சுவார்த்தைகள் தொடர்பிலான விடயங்கள் குறித்து கலந்துரையாடவும்.

அண்மைக்காலமாக கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு, ஆலயங்களின் உடைப்பு, இந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கலாசாசரப் பிறழ்வுகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாவுள்ளோம்.

எனவே தங்களது பிரதேசம், மற்றும் சமூகம் சார்ந்துவிடயங்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டுதல், பிரச்சிகைளுக்கான காரணங்கள் தொடர்பில் கருத்தொருமிப்பு எய்துதல் காலத்தின் தேவையாக உள்ளது.

அந்த வகையில் இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள் உடனடியாக ஒன்றிணைய வேண்டிய தவை எழுந்துள்ளது எனவே அனைத்து கிழக்கு மாகாண இந்து ஆலயங்களின், நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலதிக தகவல்கள் தேவைப்படின் 0777679596 என்ற இலக்கத்துடன் எஸ்.எம்.எஸ் தொடர்பு கொள்ளவும்.