மக்களுக்கு காலடியில் சென்று சேவை வழங்குதல் என்னும் மகிந்த சிந்தனை திட்டத்துக்கு அமைவாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இந்த அலுவலகம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
ஐ.நா.வின் அபிவிருத்தி திட்டம் நிதியொதுக்கீட்டின் கீழ் தேசிய மொழிகள் இன ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எஸ்.எம்.சரத்குமார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் இன ஒருமைப்பாட்டு அமைச்சின் பணி;ப்பாளர்,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், நகர அபிவிருத்தி பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித்,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்கள் இலகுவில் தமது அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கொழும்பு சென்று பல்வேறு சிரமத்தின் மத்தியில் அடையாள அட்டைகளை பெற்றுவந்த மக்கள் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிரமம் இன்றி தமது அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளமுடியும்.
இலங்கையில் வட மாகாணத்தில் முதல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது.