(சிவம்)
ஸ்ரீ அம்மா பகவானின் மட்டக்களப்பு ஏகத்துவ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப சேமப் பூஜை மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள சற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4. 30 மணிமுதல் 6.00 மணிவரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தியானம், பஜனை, பிரார்த்தனை, நடைபெற்ற அற்புதங்களுக்கான நன்றி கூறுதல் மற்றும் நோயுற்றவர்கள் குணமடைவதற்காக அம்மா பகவானிடம் வேண்டுதலில் பக்தர்கள்; ஈடுபட்டனர்.
அடுத்த வாரம் ( 15.09.2013 ) கரும விமோசனத்திற்கான பூஜை நடைபெறவுள்ளது. ஒவ்வோரு வார இறுதி நாட்களிலும் ஓவ்வோரு விமோசனத்திற்கான பூஜைகள் இடம்பெறவுள்ளதாகவும் இதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளோர் இப்பூஜைகளில் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.