கிழக்கு மாகாணத்தின் கிராமப்புற மக்களது இணைப்புக்கான உறவுப்பாலமாக வலையறவு, ஆயித்தியமலை உட்பட பல சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இந்த வாய்ப்பு மட்டக்களப்பு மாவட்ட கிடைத்துள்ளது. இப் பாலங்கள் மூலம் மட்டக்களப்பின் படுவான்கரை மக்களே அதிகம் பலன் பெறுகின்றனர்.
கிழக்கு மக்களின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மையமாக இலங்கை அரசு மேற்கொண்டு வரும், பாலங்களின் அபிவிருத்தி திட்டங்கள் அமைந்திருப்பதுடன் இவை கிழக்கு மக்களுக்குக் கிடைக்கு வரப்பிரசாதங்களாகும். இத்திட்டத்தின் மூலம் பொருளாதார, வாழ்வாதார மேம்பாடு நிச்சயமாக ஏற்படும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூபா 107.3 மில்லியன் செலவில் மட்டக்களப்பு வலையிறவு பாலம் அமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.
1கிலோமீட்டர் நீளமான வீதியுடனான (தாம்போதி) இந்த பாலத்தின் வேலைகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை அக்சஸ் நிறுவனம் மேற்கொண்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 83.2 கிலோமீட்டரில் அடங்கும்5க்கும் மேற்பட்ட பாலங்களுடனான 13 வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் வலையறவு, ஆயித்தியமலை, கிரான் ஆகிய மூன்று பாலங்களும் அடங்குகின்றன.
இத்திட்டத்துக்கென ரூபா 1763.84 மில்லியன் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. வலையறவுப் பாலமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான முக்கிய தொடர்புப் பாதைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வலையறவு மற்றும் ஆயித்தியமலைப் புதிய பாலங்கள் முழுமையான வேலைகள் நிறைவடைந்து எதிர்வரும் மாதத்தில் மக்களின் பொது பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவுள்ளன.
நடைபெற்றுவரும் பாலங்களின் கட்டுமான திட்டங்கள் மூலம் கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் செயற்பாட்டின் மூலம் கிழக்கு மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்துவந்த கவலைக்கு முற்போக்கான தீர்வு கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ்ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிலான " கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தித் திட்டத்தில் கிழக்கு அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியை அக்சஸ் பொறியியல் நிறுவனம்02 ஆண்டுகள் காலத்தில் 378 மில்லியன் ரூபா செலவில் நிறைவு செய்துள்ளது.
இந்த புதிய பாலங்கள் மூலம், படுவான்கரைப்பகுதிக்கும் எழுவான்கரைப்பிரதேசத்துக்குமான சிரமமான போக்குவரத்துப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளதுடன், பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்து இரு முனைகளிலும் இடையேயான போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
யுத்தகாலத்தில் பல்வேறு சிரமங்களை அனுபவித்த மட்டக்களப்பின் படுவான்கரைப்பிரதேசங்களில் ஒன்றான வவுணதீவு, ஆயித்தியமலை மக்கள் தற்போது நடைபெற்று வரும் வீதி அபிவிருத்தி, பாலங்கள் அமைப்பு காரமாக பெரிதும் மன ஆறுதலடைகின்றனர்.
அதே நேரம், வருடத்தின் இறுதி மாதங்களிலும், வருடத்தின் ஆரம்ப மாதங்களிலும் ஏற்படும் மழை வெள்ளத்தினால் வலையிறவு பாலம் மற்றும் வீதி உடாக போக்குவரத்துச் செய்யமுடியாத நிலை இனிமேல் ஏற்படப்போவதில்லை என்பது வவுணதீவு, ஆயித்தியமலை , பாவற்கொடிச்சேனை எனப் பல இடங்களைச் சேர்ந்த மக்களின் திருப்தியாக இருக்கிறது.
அந்த வகையில், படுவான்கரைக்கான ஒரு முக்கிய போக்குவரத்துப்பாதையாக இருக்கின்ற நீண்ட காலத் தேவையாகவும் இருந்த ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமாக தாம்போதியுடனான வலையிறவுப்பாலம் அமைக்கப்பட்டமை படுவான்கரை மக்களின் வாழ்வாதாரத் தொழில்களான நெற்செய்கை, மீன்பிடி, பண்ணைச் செயற்பாடுகள் என அனைத்துக்குமே ஒரு உந்து சக்தியாக அமைந்திருக்கும்.