செங்கலடி இரட்டைக்கொலை வழக்கு – சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

செங்கலடி இரட்டைக் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் நால்வரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செங்கலடியில், வர்த்தகர் சிவகுரு ரகு, அவரின் மனைவியான சுந்தரமூர்த்தி விப்ரா ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட அவர்களின் மகளான ஆர். தலக்ஸனா, எஸ்.அஜந், பு.சுமன் மற்றும் கு.நிலக்ஸன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்.