(புவிதரன்)
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் அலுவலக உற்பத்தித்திறனை அதிகரித்து தரமிக்கதும், வினைத்திறன் மிக்கதுமான சேவையை வழங்குகின்ற அலுவலகமாக மாற்றும் பொருட்டு 03.09.2013ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சார்ள்ஸின் அனுமதியுடன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் மனித வள உத்தியோகத்தர் திரு.க.பகீரதன் ஒருங்கினைப்பில் 100 பேர் கொண்ட அலுவலர் குழாம் உற்பத்தித்திறன் மேம்பாட்டில் துரித வளர்ச்சி கண்டு வரும் செங்கலடிப் பிரதேச செயலகத்தினை பார்வையிடும் பொருட்டு வெளிக்கள சுற்றுலா மேற்க் கொண்டது.
இந்த வெளிக்கள சுற்றுலாவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,செங்கலடிப் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் மற்றும் பல அலுவலர்களும் தமது ஆக்கப+ர்மான கருத்துக்களை வழங்கியதோடு அலுவல உற்பத்தி;த்திறனின் முக்கியத்துவம் அதன் அவசியம் போன்றவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
பின்வரும் நோக்கங்களை அடையும் பொருட்டு வெளிக்கள சுற்றுலா திட்டமிடப்பட்டது.
செங்கலடிப்பிரதேச செயலகத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக செயற்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளை அடையாளப்படுத்தல்.
செங்கலடிப்பிரதேச செயலகத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக கையாளப்பட்ட உத்திகளை இனங்காணல்.
எமது அலுவலகத்தோடு ஒப்பிட்டு வேற்றுமைகளை இனங்காணலும் சாதகாமான மற்றும் தேவையான மாற்றங்களை பட்டியல்படுத்தல்.
இனங்காணப்பட்ட மற்றும் கிடைக்கப்பட்ட அனுபவங்களை கொண்டு புத்தாக்கத்துடன் கூடிய மாற்றங்களை எமது அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தல்.
அலுவலர்களுடைய மனப்பாங்கில் சாதகமான மாற்றத்தை கொண்டுவருதல்
குழுச் செயற்பாடுகளையும் குழுச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தினையும் உத்தியோகத்தர்களிடையே ஏற்படுத்தல்.