களனிப் பல்கலைக் கழக தமிழ் மொழி மூல பட்டதாரிகள் ஒன்று கூடல்

(சசி ஜதாட்சன்)

களனிப் பல்கலைக் கழக தமிழ் மொழி மூல பட்டதாரிகளின் ஒன்று கூடல் 32 வருடங்களின் பின் நாளை 7ஆம் திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹொட்டலில் இடம்பெறவுள்ளது.

களனிப் பல்கலைக் கழகத்தில் 1973 ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழ் மொழி மூலம் அனைத்துத் துறைகளிலும் பட்டம் பெற்ற இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள பட்டதாரிகள் தங்களது குடும்ப கசகிதம் கலந்து கொள்ளவுள்ளனர்.

32 வருடங்களின் பின் இடம்பெறும் இவ் ஒன்று கூடல் ஆனது மிகவும் மக்கியமானதாகக் கருதப்படுவதாகவும் சுமார் 125க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தங்களது குடும்ப சகிதம் கலந்துகொள்வதால் முதுமையில் கடந்தகால நினைவுகளை மீட்டுக்கொள்வதாகவும்  நீண்டகால உறவைப் புதுப்பித்துக்கொள்வதாகவும் இவ் ஒன்று கூடல் அமையவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இவ் ஒன்று கூடலில் அரச உயர் அதிகாரிகள் ஆளும் கட்சி எதிர்க் கட்சி அரசியல் வாதிகள் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்வார்கள் எனவும் எற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.