மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்த நோயாளி ஒருவரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் என்பன நேற்று வியாழக்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 4ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வயோதிபரின் நலன்களை கவனிப்பதற்காக தான் நிற்பதாக கூறி அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரே நோயாளியின் கையடக்கத்தொலைபேசி மற்றும் அவரது செலவுக்காக வைத்திருந்த பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சிகிச்சை பெற்றுவரும் குறிப்பிட்ட வயோதிப நோயாளியிடம் விசாரித்தபோது தனக்கு அருகில் நின்றவரை தெரியாது எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி வைத்தியரிடம் உரியவர் முறையிட்டுள்ளார்.
