
இலைமறைகாயாக இருந்துவரும் மட்டக்களப்பின் பாரம்பரிய சர்வாங்க, சித்த, ஆயுர் வேத வைத்தியர் கிருஸ்ணப்பிள்ளை இராசநாயகம் பல்வேறு புற்று நோயாளிகளையும் குணப்படுத்தும்கைதேர்ந்தவராகத்திகழ்ந்து வருகிறார்.
40 வருடங்களுக்கும் மேலாக மட்டக்களப்பின் பட்டிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் களுவாஞ்சிக்குடி, எருவில் பிரதேசத்தில் இருந்து தனது இந்த ஆயுர்வேத சித்த மருத்துவத்தினை இவர் மேற்கொள்கிறார்.
இவருடைய சித்த மருத்துவ சேவை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணப்படுத்த முடியாத நோய்களிலிருந்து மீண்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
விசேட அம்சமாக புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் தான் குணப்படுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.
அதே நேரம், பாம்புக்கடி, நாய்க்கடி, வாதம், பித்தம், சிலேற்பனம், மனநோய், கண்நோய், எலும்பு முறிவு, சுடுபுண், கட்டிப்புண், ஒடுப்புண் என அனைத்து நோய்களையும் குணப்படுத்தியுள்ளேன்.
புற்றுநோய்கள் பாரிய நோயாகும் என்பதுடன், பெரும் பணச்செலவினையும் ஏற்படுத்து கின்றன. ஆனால் பாரம்பரிய சித்த முறைகளில் பொருள் செலவினைக் குறைத்து வைத்தியத்தினை மேற்கொள்வதே என்னுடைய நோக்கமாகும் எனவும் வைத்தியர் இராசநாயகம் தெரிவிக்கிறார்.
தொடர்புகளுக்கு 0771474080.