
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஐரோப்பிய ஜுனியனினால் எதிர் வரும் 5ஆண்டுகளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை ஒழித்தல், உள்ளுர் பொருளாதார மேம்பாடு, மாவட்டத்தின் மனிதவள ஆளுமை விருத்தி ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் நடைபெற்ற இவ் உயர் மட்ட மாநாட்டில், ஐரோப்பிய ஜுனியனின் எஸ்.டி.டி.பி திட்டத்தின் இணைந்த திட்ட முகாமையாளர் பாத்திமா நுஸ்ரத் நொசாரே, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாகாண திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரராஜா, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஜெயவதனி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.ஜயதீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஐந்து ஆண்டுத்திட்டத்தில் 1868.5 மில்லியன் ருபாய்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், உலக உணவு மற்றும் விவசாய நிறுவனம், யுனிசெப், யுனொப்ஸ், சர்வதேச தொழிலாளர் நிறுவனம், ஐ.எப்.சி எனப்படும் சர்வதேச நிதிவள நிறுவனம், ஆகிய 6 நிறுவனங்கள இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன.
அதன் படி, வறுமை தணிப்பும், அடிப்படை கட்டுமான உதவிகள் வழங்கலும், நலிவடைந்த குடும்பங்களுக்கான சேவைகளுக்காக
1541.1மில்லியன்ரூபா, ஊள்ளுர் பொருளாதார அபிவிருத்திக்கு 233.4 மில்லியன் ரூபா, மாவட்டத்தின் திட்டமிடல் அபிவிருத்திக்கு 94 மில்லியரூபா எனவும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.





