வந்தாறுமூலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இன்று வியாழக்கிழமை நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர்; தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வந்தாறுமூலை வேக் கவுஸ் வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோணேசபிள்ளை சுதாகரன் (வயது 43) என்பவரின் சடலத்தையே பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த குடும்பஸ்த்தரின் வீட்டுக்கு முன்பாக இருந்து மாமரத்தில் இருந்தே தூக்கிய தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் விபத்து ஒன்று காரணமாக சுகவீனமுற்று வீட்டில் இருந்துவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.