ஜனநாயகம் தலைகளை எண்ணுகிறதே ஒழிய தலைகளை உடைத்துப்பார்ப்பதில்லை. அது எமது நாட்டுக்கும் பொருந்தும். ஏனெனில் கோமாளிகள் கூடாரமாகிவிட்டது எமது நாடு. இதில் எந்தக் கோமாளி சிறந்த கோமாளி என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் அரசியல்வாதிகளுக்குண்டு என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரது அண்மைய விஜயத்தின் போது நடைபெற்ற விடயங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களின் அண்மைய இலங்கை விஜயம் விரும்பியோ விரும்பாமலோ அவர் வருகை தொடர்பாக எதிர்பார்ப்புக்களை மேற்கொண்டிருந்தோரிடையே பல்வேறு தரப்புக்களிடையேயும் பல்வேறு கருத்துக்களை கிளறிவிட்டுச் சென்றுள்ளது என்பது மட்டும் உண்மை.
குறிப்பாக அரசுத்தலைமை,அமைச்சரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் தமிழ்த் தேசியத் தரப்பு, தென்னிலங்கை இன, மத வாதிகள் அனைவர்க்கும் அவரவர் நிலைப்பாட்டுக்கு அவரவர் எதிர்பார்க்கைகளுக்கு, ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஆனால் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை பேரவையின் நடுநிலையான கருத்தினை விதைத்துவிட்டுச் சென்றுள்ளது என்பதும் உண்மை.
சிலவேளை குற்றவாளிக்கு நீதிபதியின் தீர்ப்பு நடுநிலையாக அமையாது, கயமையுள்ளம் கொண்டவனுக்கு,தெய்வத்தின் தீர்ப்பு கண்ணில்லாத கடவுளின் தீர்ப்பாக இருக்கும். ஆனால் அறம் கூறும் அவையத்து நீதி அனைவரையும் திருப்திப்படுத்தாது. அராஜகவாதிகளுக்கு அது பக்கச்சார்பானதாகவே இருக்கும்.
இனிவரும் காலங்களில் இது தொடர்பாக நாம் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் நாற்றமடித்த இன, மத வாதிகளது அரசியல்வாதிகளது கோமாளிக்கும்பல்களது மேதாவிலாசத்தை அறிந்து கொண்டு அதற்குப்பின்னர் அவை தொடர்பாக விமர்சனங்களை மேற்கொள்வது பொருத்தமாகும் என்பதே எனது கருத்தாகும்.
மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் அவர்கள் நமது நாட்டுக்கு அரசின் அழைப்பின்பேரில் வருகை தந்தவேளையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகள்,பேட்டிகள்,பத்திரிகையாளர் சந்திப்புக்கள் யாவும் ஒன்றை மட்டும் தெளிவாக சர்வதேசத்துக்கு உணர்த்தியுள்ளது.
இலங்கையின் உயர்மட்டம் தொடக்கம் அடிநிலை வரை இன்னும் நாகரிகமடையவில்லை. சர்வதேசங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் அளவுக்கு அரசியல் ஞானமும் இல்லை,அரசியல் தெளிவும் இல்லை. அரசியல் முதிர்ச்சியும் இல்லை என்பதை சர்வதேசம் இலகுவாகப் புரிந்து கொண்டிருக்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் என்பது, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகத்துக்கு அடுத்த படிநிலையில் உள்ள ஒரு உயர் பதவி நிலை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கம் வகிக்கும் நாடுகளால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை தரம் அது. அழைப்பது அரசு உபசரணை அரசு. ஆனால் அமைச்சரது நடத்தைகளோ தலைகீழாக உள்ளது.
ஒரு அமைச்சர் கூறுகின்றார் 'பிள்ளை என்ன பில்லா வந்தாலும் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் மாறாது.' ஒரு அமைச்சர் கூறுகின்றார் 'நான் பிள்ளையை திருமணம் செய்ய ரெடி'- இது தொடர்பாக பத்திரிகையாளர் வினவ வேறு அமைச்சர் கூறுகின்றார் நீPங்கள் ஒரு பக்கக் கதையை மட்டுமே கேட்கின்றீர்கள் என பகிடி விடுகின்றார்.
நமது நாட்டின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்ய,ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்துக்கமைய வருகை தந்த ஒரு உயர்மட்ட 'பெண்மணி' தொடர்பாக அரசாங்க அமைச்சர்களது விமர்சனங்களை மட்டும் வைத்துப் பார்க்கும் போது இங்கு மனித உரிமை,பால் சமத்துவம் எப்படி இருக்கும் என்று களநிலைமைகளைப் பார்க்காமலேயே நவநீதம்பிள்ளை அவர்கள் புரிந்து கொள்வார் என்பதே எனது கருத்து.
அண்மையில் ஒரு அமைச்சர் கூறியதாக பத்திரிகையில் ஒரு செய்தி வாசித்த ஞாபகம். எமது அமைச்சரவையில் பெரும்பான்மையோர் பொருளாதாரத் தகுதியுடையோரே ஒழிய கல்வித் தகமை சிறிதும் இல்லை என்று. பார்க்கும்போது அந்த அமைச்சர் கருத்துடன் உடன்படவே என்னால் முடிகிறது.
ஏனெனில் ஜனநாயகம் பற்றி ஒரு அறிஞர் கூறியது இப்போது ஞாபகம் வருகின்றது. ஜனநாயகம் தலைகளை எண்ணுகிறதே ஒழிய தலைகளை உடைத்துப்பார்ப்பதில்லை. அது எமது நாட்டுக்கும் பொருந்தும். ஏனெனில் கோமாளிகள் கூடாரமாகிவிட்டது எமது நாடு. இதில் எந்தக் கோமாளி சிறந்த கோமாளி என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் அரசியல்வாதிகளுக்குண்டு.
இது தான் நவநீதம்பிள்ளை தொடர்பாக சிங்கள அரசியல்வாதிகள் கருத்து தொடர்பாக நான் புரிந்து கொண்டவை.