இலங்கைப் பொலிஸ் சேவையின் 147 வது ஆண்டை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையப் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர தலைமையில் நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்புப் பேதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.