பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் வவுணதீவுப் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் இவர்களுக்கு தாகசாந்தியும் அன்னதானமும் வழங்கப்பட்டு யாத்திரை வழியனுப்பப்பட்டது.
கடந்த 30ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை சதா சகாய அன்னை ஆலய திருவிழா இன்று நிறைவுபெற்றது.
வருடா வருடம் இப் பாத யாத்திரை இடம்பெற்றுவருவதுடன் வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் தரித்து விசேட செபவழிபாடு இடம்பெறுவது வழக்கம்.
பிரதேச செயலகத்தை அடையும் யாத்திரிகர்களுக்கு தாகசாந்தியும் அன்னதானமும் நலன்புரிச் சங்கத்தினால் வழங்கப்படும் நிலையில் இவ் வருடம் பிரதேச செயலாளரும் நலன்புரிச் சங்கத் தலைவருமாகிய வெ.தவராஜா தலைமையில் இப் பணி இடம்பெற்றதுடன் விசேட செபவழிபாடும் இடம்பெற்றது.
தொடர்ந்து அன்னையின் சொருபத்திற்கு பிரதேச செயலாளர் மலர்மாலை அணிவிக்க பிரதேச செயலக அதிகாரிகள் மலர் தூவி யாத்திரையினை வழியனுப்பிவைத்தனர்..