களனி பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி மூல பட்டதாரிகளின் ஒன்று கூடல் 30 வருடங்களுக்கு பின்னர் நேற்று(சனிக்கிழமை) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடை பெற்றது.
களனியின் வசந்தம் எனும் மகுடத்தின் கீழ் 1973ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டு வரை களனி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலம் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் ஒன்று கூடலே இதன் போது இடம் பெற்றது.
களனி பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி மூல பட்டதாரியும் இறைவரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் இப் பல்கலைகழக பட்டதாரியும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளருமான பொன் செல்வநாயகம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
களனி பல்கலைக்கழகத்தில் 1973ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டு வரை தமிழ் மொழி மூலம் பட்டம் பெற்றவர்களிடையே தேசிய ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதே இந்த ஒன்று கூடலின் நோக்கம் என இப் பல்கலைகழக பட்டதாரியும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளருமான பொன் செல்வநாயகம் தெரிவித்தார்.
இந்த ஒன்று கூடலின் விஷேட உரையினை மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா நிகழ்த்தினாhர்.
120 பட்டதாரிகள் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலும் இடம் பெற்றது.