பேராசிரியர் கு.தெட்சணாமூர்த்தியின் ஓராண்டு நினைவுதினம்.

(சசி ஜதாட்சன்)

பேராசிரியர் அமரர் கு.தெட்சணாமூர்த்தியின் ஓராண்டு நினைவுதினம் நேற்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு பலக்லைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிபிறேம்குமார் மற்றும் பேராசிரியர் எம்.மௌனகுரு, கிழக்கு பலக்லைக்கழக முன்னாள் உப வேந்தர் எஸ்.ராஜரத்தினம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கணகசபை, கிழக்கு பலக்லைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.கணகசிங்கம், சமூக சேவையாளர் காசுபதி நடராஜா, மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா சிவானந்தா தேசிய பாடசாலையின் பழய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.குருநாதன் உட்பட தெட்சணாமூர்த்தியின் மனைவி மற்றும் பி;ள்ளைகள் குடும்பத்தினர் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழய மாணவர் சங்கத்தின் பிரதிநதிகள் பிரமுகர்கள் சமய பிரமகர்கள் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் கு.தெட்சணாமூர்த்தியின் ஓராண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய தெட்சணம் எனும் நினைவு மலரும் இதன் போது வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் நினைவுப்பேருரைகளும் நிகழ்த்தப்பட்டன.

பேராசிரியர் தெட்சணா மூர்த்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கு விஞ்ஞான துறையின் பதில் தலைவராகவும் விவசாய பொருளியல் துறையின் பதில் தலைவராகவும் கடமையாற்றியதுடன் மட்டக்களப்பின் சிறந்த கல்வி மானும் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.