மட்டக்களப்பில் முதன் முறையாக தேசிய மட்ட விளையாட்டுப்போட்டி

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கரம் போட்டி மட்டக்களப்பில் முதன்முறையாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ,மகஜன கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த கரம் போட்டி இன்று காலை ஆரம்பமானது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ரீதியிலான போட்டியொன்று முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வானது மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கர வர்த்தி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் கொழும்பு கல்வி வலய உடற்கல்வி உதவி பணிப்பாளர் பந்துல மற்றும் மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த தேசிய கரம்போட்டியில் இலங்கையின் 09 மாகாணங்களிலும் இருந்து 88 பாடசாலைகளில் இருந்து 114 மாணவ குழுக்களைக்கொண்ட 684 மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.

இன்று ஆரம்பமான இந்த போட்டிகள் திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.

இந்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துபடுத்தும் வகையில் ஆறு குழுக்கள் பங்குபற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களே தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.