இன்று பிற்பகல் 2.30மணியளவில் இலட்சியம் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலட்சியம் வெளியீட்டகத்தின் இணைப்பாளர் த.விஸ்வஜிந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த வெளியீட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சி.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு அதிதியாக தேசிய கல்விக்கல்லூரி க.புண்ணியமூர்த்தி,மட்டக்களப்பு மாவட்;ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக செட்டிபாளையம் மகா வித்தியாலய அதிபர் த.அருள்ராஜா, மாங்காடு சரஸ்வதி வித்தியாலய அதிபர் கோ.கருணைநாயகம், ஊடகவியலாளர் வா.கிருஸ்ணகுமார் மற்றும் செட்டிபாளைய ஆலய பரிபாலனசபை தலைவர்கள்,சங்கங்கள்,மன்றங்கள்,கழகங்களின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
சொற்சிற்பி இ.சபாவின் மூன்றாவது கவிதை நூலாக “உனை நீயே செதுக்கு” கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
