வெளிநாடுகளில் உள்ளவர்கள் சமாதானத்தினை குழப்பமுனைகின்றனர்-கிழக்கு இராணுவ தளபதி லால் பெரேர

யுத்தகாலத்தில் புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ளவர்களும், வெளிநாட்டு உளவு நிறுவனங்களும் அரசாங்கத்தின் அனுமதியில்லாது எமது தமிழ் மக்களின் பிரதேசங்களில் வந்து மக்களைக் குழுப்பி அவர்களுடைய அமைதியையும் சமாதானத்தினையும் இல்லாமல் செய்ய முயல்கிறார்கள் அவற்றில் கவனமாக இருக்கவேண்டும் என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் லால் பெரேரா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் லால் பெரேராவுக்கும் இடையில் வெலிக்கதையிலுள்ள கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அச் சந்திப்பில் இந்துப்பிரதிநிதிகள் முன்நிலையில், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 30 வருட யுத்தத்தில் தமிழ் சிங்கள மக்கள்பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகிறோம். பல பிரதேசங்களில் சிங்கள மக்கள் மிகள் குறைந்த வியைலில் காணிகளை விற்றிருக்கிறார்கள். தமிழ் மக்கள் பல சொத்துக்களின் அழிவுகளையும் சந்தித்ததுடன், பெரும் இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள்.

தற்போது இராணுவத்தினர் உதவிகளைப் புரிந்தாலோ, முன்றவந்தாலோ தமிழ் மக்கள் சந்தேகத்துடன் அச்சமும் படுகிறார்கள்.

எவ்வளவுதான் அபிவிருத்தியைச் செய்தாலும் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் வேண்டும் என்பதில் நம்பிக்கையாக உள்ளார். அதனை செய்றபடுத்தும் பொறுப்பான வேலையை எங்களிடம் கொடுத்திருக்கிறார். அதன் படி, நாங்கள் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கும் உதவிகளைச் செய்து வருகிறோம்.

எமது இராணுவத்தினர் கதிர் காமம் செல்லும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறுபட்ட உதவிகளை நல்கி வந்தார்கள். அதுபோல் அண்மையில்  ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போதும் நாங்களும் உதவிகளைச் செய்தோம், அரசாங்க அதிகாரிகளான அரச அதிபர், பிரதேச செயலாளர்களுடனும் இணைந்து பல சேவைகளைச்செய்தோம். இதனை விடவும் கிழக்கில் எமது இராணுவத்தினர் இன்னோரன்ன உதவிகளையும் மேற்கொண்டும் வருகின்றார்கள். எமது செயற்பாடுகளை பார்த்து அரசாங்க அதிகாரிகள் பராட்டியுமுள்ளார்கள்.

இவை ஒருபுறமிருக்க, யத்தகாலத்தில் புலம்பெயர்ந்து வெளி நாடுகளிலிருப்பவர்கள் இங்குள்ள சுமுகமான சூழ்நிலையினையும், மக்களின் அமைதியையும் குழப்புவதற்கு முற்படுகின்றார்கள். இதனை எமது புலனாய்வுத் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதில், தமிழ் மக்களே நல்லது எது கெட்டது எது என்பதனை அறிந்து நடக்க வேண்டும்.  பல சந்தர்ப்பங்களில், எமது பாதுகாப்பு அதிகாரிகள் சமுகமாக செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் சில அரசியல்வாதிகள் சேறு பூசுகின்றார்கள். அதற்குத் தொடர்ந்தும் முயல்கிறார்கள்.

கடந்த காலங்களில் பெரிதும் பாதிப்புகளை அனுபவித்த கிழக்கு மாகாண தமிழ் சமூகத்திற்கு உதவிகளை நல்குவதற்கும், இணைந்து செயற்படுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதில் சந்தேகம் ஒரு தடையாக இருக்கிறது. எங்கள் மீது நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையல்லை. ஆலயங்கள் ஆன்மீகக் கருத்துகள் ஊடாக நற்பிரஜைகளை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்யவேண்டும்.
கிழக்கில் 30 வருட காலத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடையே ஒரு சிறந்த தலைமைத்துவம் இன்மையால் தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களை இழந்து வருகின்றனர். தமிழ்மக்கள் மத்தியில் சிறந்த தலைமைத்துவத்தினையும் எம்முடனான சுமுக உறவையும் ஏற்படுத்த நாம் உங்களுடன் இணைந்து செயற்படுவோம்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , அக்கரைப்பற்று , திருக்கோயில் , போன்ற பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மிக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுபோல் பாதிக்கபட்ட வாகரை பிரதேச மக்கள் தற்போதும் சிறப்பான வாழ்வுக்கு வருவதற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கோயில் வேலைகளில் ஈடுபடுவதற்கும் செயற்பாடுகளுக்கும் முதியவர்கள்தான் அதிகம் முன்வருபவர்களாக இருந்கிகாறர்கள். இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசி, இணையத்தளம் போன்றவற்றினால் ஈர்க்கப்பட்டவர்களாகவும்,  சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள். திட்டமிடல் இல்லாமல் இளவயது திருமணம், இளவயதில் அதிக கடன்சுமை போன்றவற்றினால் தற்கொலைகளும் முயல்கிறார்கள். இவைகளனைத்திற்கும் ஆலய மதகுருமார் தர்மகத்தாக்கள், பெரியோர்கள் போன்றோர் அவர்களுக்கு அறிவுரைகள் வளங்க வேண்டும். அதனை ஆலயங்கள் மதஸ்தலங்கள் மூலம் ஆன்மீகக் கருத்துககள் மூலம் மாற்றலாம்.

தமிழ் சமூகத்தினைச் சார்ந்தவர்கள் அதிகம்பேர் அரச உயர் பதவிகளில் இல்லாத நிலையை மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது.  அதற்காக எதிர்கால சமூதாயமாகிய உங்களுடைய பிள்ளைகளை நன்றாக கல்வியறிவூட்டி சிறந்ததொரு தமிழ் சமூகத்தினைக் கட்டியெழுப்ப வேண்டும்.  அரச உயர் பதவிகளில் அதிக தமிழர்கள் வகிக்கும் நிலை ஏற்பட வேண்டும். இவைகளை தடுப்பதற்கும் குழப்புவதற்கும் வெளிநாட்டுகளிலுள்ளோர் முற்படுகின்றனர்.

இதனால் எதிர்கால சமூகமே பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிந்திக்கக்கூடிய கல்வி கற்ற எதிர்கால சமூதாயம் உருவாகும் போது குழப்ப நினைப்பவர்களின் உண்மையான முகம் வெளிப்படும். ஆகவே ஆலயங்கள் மக்களுக்கு நல்ல செய்தியினைக் கூற வேண்டும். அப்போதுதான் நல்ல சமூகம் வளரும் இதனைத்தான் நான் முஸ்லிம் உலமாக்களிடத்திலும் கூறியிருக்கின்றேன்.

நான் நேற்று யாழ்ப்பாணம் சென்று வந்தேன் மிகவிரைவாக இங்கு வந்து விட்டேன் அப்படி வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு இருக்கின்றன. 7 மணிக்குப்பின்னர் யாரும் நடமாட அச்சப்படும் நிலை தற்போது இல்லை. இப்போது எந்த நேரமும் எங்கும் பிரயாணம் செய்யலாம் பதட்டங்கள் இல்லை பதட்டங்கள் இல்லை. சமாதானமாகவும் மகி;ச்சியாகவும் வாழும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை நாமும் எமது எதிர்கால சமூகமும் அனுபவிக்க வேண்டும்.

நான் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஆனால் கிழக்கிலுள்ள மக்கள் என்றும் மற்றவரை மதிக்கும் பண்புகள் அதிகமுடையவர்கள் சிறந்த பண்புகளை உடையவர்கள்.  நீங்கள் எங்களைச் சந்திக்க வரும்போது பல கட்டுக்கதைகளை உங்கள் மத்திக்கத்தில கூறியிருப்பார்கள்.  நீங்கள் போய் பொதுமக்களிடம் இங்கு நடந்தவற்றைக் கூறுங்கள். நாங்கள் உங்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் சமாதானத்தினைக கட்டியெழுப்ப வேண்டும் என்றே எண்ணுகிறோம்.

தற்போது சில தமிழ்க் கிராமங்களில் சட்டவிரோத மதுபானப்பாவனைகள் போன்றவற்றினால், பாலியல் வல்லுறவு போன்ற விபரீதமான செயல்கள் நடைபெறுகின்றன. எல்லைப் புறங்களிலுள்ள சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிங்களும் மேற்கொள்ளுகின்றார்கள் இதனைத் தீர்த்து வைக்க வேண்டும். தமிழர்களைவிட ஏனையவர்கள் பல்வேறுபட்ட உயர் பதவிகளில் வகிக்கன்றார்கள். இவைகளனைத்தும் மாற்றமடைய வேண்டும்.

கிராம மட்டம், பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் என பிரஜைகள் குழுக்களை அமைந்து இந்தக் குழக்களின் பிரதிநிதிகள் மாவட்ட மட்டத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்திக்குழுக் கூடடங்களில் பங்கு கொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

பிரச்சனைகளை ஜனாதிபதி வரைக்கும் இந்தக் குழுக்கள்மூலம்  தெரிவிக்கலாம். கடந்த காலங்களையும் கடந்த தலைமைத்துவங்களையும் மனத்தில வையாது எதிர் காலத்தினை மையப்படுத்தி நாங்கள் சேவை புரிய வேண்டும் நல்ல இளைஞர் சமூகத்தினைக் கட்டியெழுப்ப வேண்டும். எதிர் காலததில் சிறந்த தமிழ் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

தற்போது, கருணா , பிள்ளையான் போன்றோர் பழைய விடயங்களை மறந்து செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அதுபோல் சிறிய வயதில் தமது பெற்றோரை இழந்து வெளிநாட்டில் வசித்து வந்த அருண் தம்பிமுத்து தற்போது மீண்டும் இற்கு வந்து, தனது சொத்துக்களையும் காணிகளையும் பார்த்து பராமரித்துக் கொண்டு,   தான் இனிமேல் வெளி நாடு செல்லப் போவதில்லை எமது மக்களுக்காக கடமை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

எமது மாகாணம்சகல வளங்களையுமு; கொண்டதாகும் நாம் எங்கிருந்தும் எதனையும் பெறவேண்டியதில்லை. கிழக்கில் அமைதியையும் மகிழ்ச்சியான சந்தோசத்தையும் எற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும்.

நூற்றுக்கு இருநூறு வீதம்எங்களை நம்புங்கள், எங்கள் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். எங்கள் மீதும் என்மீதும் குற்றங்கள் காணுமிடத்து எமக்கு எடுத்துக்காட்டுங்கள். எம்முடன் நேரடியகாத் தொடர்பு வையுங்கள் மாவட்டங்களிலுள்ள எமது அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உங்களது பிரச்சனைகளை தெரியப் படுத்துங்கள். மட்டக்களப்பில் கோவில்கள் உடைக்கப் பட்டமைக்கு இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தினர். அது எமக்கு பெரும் கவலையினைத் தந்தது. இறுதியில் நாம் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். ஆனால் இதனை வைத்துக்கொண்டும் அரசியல் லாபம்தேட முற்பட்டனர்.

ஆலயங்களின் பிரமுகர்களாகிய உங்களின் கருத்துக்கள் அனைத்தினையும் நான் செவிமடுத்தேன் இவற்றுள் உடன் தீர்வு காணவேண்டிய பிரச்சனைகளும் உண்டு வேறு துறைகளுடன் தொடர்பு கொண்டு தீர்வு காணவேண்டிய பிரச்சனைகளும் உண்டு அவைகளனைத்திற்கும் நான் தீர்வு பெற்றுத்தருவேன் என்பதனை இவ்விடத்தில் கூறுக்கொள்கின்றேன்.

கடந்த காலத்தில் நடவத்தவற்றைப் பேசி காலத்தினை வீணடிக்காமல், எதிர்காலத்தில் அரயில், அறிவியல், புத்திஜீவிகளை உருவாக்கிக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
பல கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் காத்தான்குடி எல்லைப்பிரச்சினை, ஊறணி மயானப்பிரச்சினை, சங்கமங்கண்டி, வளத்தாப்பிட்டி, தாந்தாமலை எனப் பலவற்றிற்கும் சுமூகமான தீர்வினைக் காணமுடியும். அவற்றுக்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், இராணுவத்தின் சார்பில்மட்டக்களப்பு 23ஆவது பிரிக்கேட்டின் கட்டளைத்தளபதி அத்துல கொடுப்பிலி, திருமலை 22ஆவது பிரிக்கேட்டின்  கட்டளைத்தளபதி பியந்த விக்கிரமரத்ன, அம்பாறைக் கட்டளைத்தளபதி ஹரேன் பெரேரா மற்றும் சிவில் பாதுகாப்பு இணைப்பதிகாரிகள், கேணல்களும், இந்து நிறுவனங்களின் சார்பில், சுவாமி மகேஸ்வர சைத்தன்னிய, கனகசபாபதி குருக்கள்,  இந்து சேவா சங்கத்தின் எஸ்.சுதர்சனன் ஐயர், இந்து ஆலயங்களின் மட்டு அம்பாறை ஒன்றியத்தின் தலைவர் ஞா.துரையப்பா, பொருளாளர்திரு எஸ்.மகேந்திரன்,பிரச்சாரச்செயலாளர்சி.தியாகராஜா, இந்து ஆலய அறநெறிப்பாடசாலைகளின் ஒன்றியத்தின்தலைவர் பி.ஜெயரெட்ணம், விஸ்வ ஹிந்து பரிசத்தின் கிழக்குப்பிராந்திய இணைப்பாளர் வி.கமலதாஸ் மற்றும் பல முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.