(எம்.எஸ்.நூர்)
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக்குழுக்களின் மீளாய்வுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் இந்த மீளாய்வக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூடடத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிதியட்சகர் மேவன் சில்வா உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த ரத்னாயக்கா மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் செயலாளர் பொலிஸ் பரிசோதகர் எஸ்.கொபேவல மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் ஆலோசனைக்குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட 84 ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை என்பன வழங்கப்பட்டன.