தூய காணிக்கை அன்னையின் திருச்சொரூபம் ஸ்தாபிப்பு

இறைவனின் தாயும் முழு உலகிற்கும் தாயுமாகிய அன்னை மரியாள் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்ட நாளை நினைவுகூர்ந்து முழு உலகமும் கொண்டாடுகின்றது. 

இந்நாளை நினைவுகூரும் முகமாக மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் நேற்றுக் காலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி சி.வி.அன்னதாஸ் தலமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து அன்னையின் விண்ணேற்பு நாளை நினைவுகூரும் முகமாக ஆலயத்தின் முன்பகுதியில் தூய காணிக்கை அன்னையின் பெரிய திருச்சொரூபம்; பங்குத்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டு பக்தர்களின் வணக்கத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
திருச்சொரூபத்தையும்இ கட்டிடத்தையும் இரு குடும்பங்கள் தங்கள் நன்றியாக வழங்கியுள்ளார்கள்.