சேவ்த சில்ரன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வித் திணைக்களத்துடன் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனம் இணைந்து நடத்திய ஏழு நாட்களைக் கொண்ட "உளசமூக ஆற்றுப்படுத்தல்" பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வு நடைபெற்றது.
பயிற்சியில் பங்கு கொண்ட ஆசிரியர்கள், ஆற்றுப்படுத்துனர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு சான்றிகழ் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் ஜீ.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.யின் பொதுச்செயலாளர் கலாநிதி டி.டி.டேவிட், வை.எம்.சீ.ஏ யின் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் எஸ். பற்றிக், சேவ்த சில்ரன் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் க.திருக்குமரன் மற்றும் பயிற்சியின் வளவாளராக கலந்து கொண்ட திருமதி. ஜெட்சி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பங்குபற்றுனர்களை வாழ்த்தியதுடன் பயிற்சிக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.