மட்டு மேற்கு வலய மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிசிப் பட்டறை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப்  பயிற்சிப் பட்டறையானது இரு நாள் வதிவிடப்பயிற்சியாக வை.எம்.சீ.ஏ. (கிறிஸ்தவ வாலிப சங்கம்) நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இதில் மட்/ தாண்டியடி அ.க.த. பாடசாலை, மட்/ விளாவெட்டுவான் விநாயக வித்தியாலயம், மட்/ ஈச்சந்தீவு இராம கிருஸ்ண மிஸன் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குபற்றுகிறார்கள் எமது பயிற்சிக்கு வளவாளர்களாக பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஜீ.ஸ்ரீநேசன், பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) எஸ்.சசீந்திர சிவகுமார் ஆகிய அதிகாரிகள் பயிற்றுவிக்கின்றார்கள்.

இப்பயிற்சியின் தொடர் பயிற்சியானது எதிர் வரும் 26,27.08.2013 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியானது சேவ்த சில்ரன் நிறுவனத்தின் நிதியுதவியுடனும்;, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வித் திணைக்களத்துடன் இணைந்தும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.நிறுவனமானது பயிற்சியை நடாத்தி வருகின்றது.