மரபுரிமைகள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இந்த சமாதான பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம் ஊடாக சென்று மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நிறைபெற்றது.
இதன்போது அகிம்சா வாதி காந்த அடிகளின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்ட விசேட மேடையில் பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.