(நடனம்)
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கான குருளைச் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்றது.
இந்தப் பாடசாலையில் சாரணருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இதுவே முதல் தடவையாக இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை வலய ஆசிரிய ஆலோசகர் கே.குமாரசாமி , குடியிருப்புமுனை சண்முகாவித்தியாலய அதிபர் மு.இராஜகோபால் , பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் கு.மதிவண்ணன் உட்பட அதிதிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன்; ஆரம்பப் பிரிவினைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது .
இதற்கான ஒழுங்கமைப்பினை உடற்கல்வி ஆசிரியை திருமதி சு.ரூபன்,பிரதி அதிபர் ந.வன்னியசிங்கம் மேற்கொண்டமை குறிப்பிடத் தக்கது.









