வாணவேடிக்கைகளுடன் இடம்பெற்ற மாமாங்கப்பிள்ளையார் ஆலய ஐந்தாம் திருவிழா

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் ஐந்தாம் திருவிழா தினமான இன்று பட்டாசுகள் பொழிய கோலாகலமாக உற்சவம் இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் ஐந்தாம் தினமான இன்று புகையிரத திணைக்கள ஊழியர்கள் இணைந்து இந்த உற்சவத்தை நடத்தியிருந்தனர்.

இதன்போது சுவாமியின் வெளிவீதியுலாவின் போது வாண வேடிக்கைகளினால் உற்சவம் களைகட்டியது.