சமுர்த்தி அபிவிருத்தி சங்கத்தின் மாநாடு

(எம்.எஸ்நூர்)

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்கள் மாநாடு இன்று(3.7.2013) மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள நந்த கோபன் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத்தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணி;ப்பாளர் பி.குணரட்ணம், உட்பட தேசிய சங்கத்தின் தலைவர் பிரதி செயலாளார், பொருளாளர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் போது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திணைக்களத்தினுள் உள்வாங்கி அவர்களை ஓய்வூதியத்திட்டத்திற்குள் உள்வாங்கியமைக்காக அரசாங்கத்திற்கும் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.